Monday, June 18, 2012

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை விஜயம்?.

Monday, June, 18, 2012
இலங்கை::இலங்கையில் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இந்த வாரத்திற்குள் பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment