Monday, June, 18, 2012சென்னை::இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம்-கேரள முதல்வர் உம்மன்சாண்டி சந்திப்பு!:-
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் கேரளாவுடன் உறவை பலப்படுத்தும்விதமாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் 3 நாள் பயணமாக கேரளாவுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார். மேலும் கேரள முதல்வர் உம்மன்சாண்டியையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment