Sunday, June, 10, 2012காபூல்:ஆப்கானிஸ்தானில் இரண்டு நாட்களுக்கு முன் லோகர் மாகாணத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, நேட்டோ படை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நேட்டோ படைகள் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்ததே தவிர மன்னிப்புக் கேட்கவில்லை. இதனால், நேட்டோ படைகளுக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லப்படும் பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டது. இந்த பாதையை திறக்கக்கோரி அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.இதற்கிடையே ஆப்கானிஸ்தானில், கடந்த 6ம்தேதி, நேட்டோ படைகள் லோகர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தின. பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நினைத்து, அப்பாவிகள் வசித்த வீட்டின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட, 18 பேர் பலியாகினர்.இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட, ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைத் தளபதியும், நேட்டோ படைகளின் அதிகாரியுமான ஜான் ஆலன், அப்பாவிகள் கொல்லப்பட்ட கிராமத்துக்கு சென்று, அப்பகுதியினரிடம் மன்னிப்புக் கேட்டார். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment