Sunday, June 10, 2012

இலங்கையில் மாற்று எரிசக்தி; உதவுகிறது பின்லாந்து!

Sunday, June, 10, 2012
இலங்கை::இலங்கையில் மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பின்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.

பின்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் டர்ஹி ஹகாலா மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய பின்லாந்தில் பயன்படுத்தப்படுகின்ற மாற்று எரிசக்தி மூலங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதுடன், தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குவதற்கு அந்த நாட்டின் தூதுவர் இணங்கியுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய எரிசக்தி தேவையில் 20 வீதமானதை மாற்று எரிசக்தி மூலங்களில் உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பாக உள்ளது.

இந்த திட்டத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பின்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment