Sunday, June 10, 2012

தமிழக அரசு மீது கேரள குற்றச்சாட்டு

Sunday, June, 10, 2012
திருவனந்தபுரம்::சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை தமிழர்கள் தற்போது கேரள கடற்கரையின் ஊடாக தமது பயணத்தை ஆரம்பிப்பதாக கேரள புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்ட விரோதமாக செல்பவர்களுக்கு தமிழக காவல்துறையினர் உதவுவதாக கேரள தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தமிழக காவல்துறையினரின், குறிப்பாக தமிழக புலனாய்வுத் தரப்பினரின் உதவி இன்றி, கேரள மானிலத்திற்குள் நுழையவது கடினமான விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களும் கேரள மானிலத்தின் கடற்கரைப் பிரதேசங்களின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக கேரள மானில அரசாங்கம் தமிழக மானில அரசாங்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக கேரள புலனாய்வுத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு வருட காலப்பகுதியினுள், கேரளத்தின் ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முனைந்த இலங்கையர்களில் 300க்கும் மேற்பட்டவர்களை தாம் கைது செய்துள்ளதாக கேரள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment