Sunday, June, 10, 2012இலங்கை::புலம்பெயர்ந்து வாழும் (புலி ஆதரவு) தமிழர்களால் உள்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு பேராபத்து ஒன்று காத்திருக்கிறது. வெளிநாடுகளில் எமது நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேச விரோத செயற்பாடுகள் எல்லை கடந்து செல்வதைக் காண முடிகிறது.
தாமும் இலங்கையர் என்பதை மறந்து புலிக்கொடிகளை ஏந்தி வீதியோரங் களிலும், விமான நிலையங்களிலும் நின்று கூக்குரலிடுவதால் இவர்கள் எதைச் சாதிக்க நினைக்கிறார்களோ தெரியவில்லை. மேலைத்தேய நாடுகளின் பொறுமையை இழந்து அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டால் தாம் இலங்கைதான் தஞ்சம் என வந்திறங்க வேண்டும் என்பதை இவர்கள் மறந்து செயற்படுவது ஏன் என்று புரியவில்லை. கனரக ஆயுதங்கள், இராணுவ பலம், வான்படை, கடற்படை என வைத்திருந்து போரிட்ட பிரபாகரனாலேயே எதுவும் செய்யமுடியாது போனதை உணராது தஞ்சம் தேடி பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் ஏன் இந்தத் தேவை யில்லாத வேலை. திருட்டு கிறடிற் காட்டுகளில் வெள்ளைக்காரரது பணத்தை மோசடி செய்து பிரஜாவுரிமைக்காக வெள்ளைக்கார பெண்களை மறுமணமும் செய்து உல்லாச வாழ்வு வாழும் பல புலம் பெயர் மக்கள் உள்ளூரில் தமிழன் பட்டவலி புரியாது. மேலும் வலியைக் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயமாகும்.
பிரபாகரனின் அழிவிற்குப் பின்னரும் தமிழினம் போராட முயல்வது சரிதானா என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற எந்தவொரு தமிழ் மகனும் இனியும் தமிழ ருக்கு ஆயுதப் போராட்டம் தேவையற்றது எனும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
யுத்தத்தால் அழிவுக்குள்ளான பிரதேசங்கள் இன்று பாரிய அபிவிருத்தி கண்டுவரு கிறது. அரசாங்கம் தென்பகுதி அபிவிருத்தியை விடவும் வடக்கு கிழக்கில் துரித மாகப் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் காரணமாக புலம்பெயர் ந்து வாழும் நற்சிந்தனை கொண்ட தமிழர்கள் பலர் அப்பகுதிகளில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து அவர்களது மகன் அருண் தம்பிமுத்து அவர்கள் அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு பகிரங்க அழைப்பு ஒன்றினை விடுத்திருந்தார். அமைதி நிலையில் சமாதானமாக மக்கள் வாழத் தொடங்கியுள்ள எமது நாட்டில் புலம்பெயர் தமிழர்களும் வந்து மீளக்குடியேறி வாழ்வதுடன் முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டிருந்தார்.
அருண் தம்பிமுத்து தனது 13ஆவது வயதில் தனது தந்தையையும், தாயாரையும் புலிகள் சுட்டுக் கொன்ற போது சிறுவனாக வெளிநாடு சென்றவர். இன்று அமைதி யும், சமாதானமும் திரும்பியுள்ள தனது சொந்த நாட்டிற்கு வந்து குடியேறி முதலீடு களையும் இட்டுள்ளார். அவரது தாய் நாட்டுப்பற்றுக்கு கெளரவமளிக்கு முகமாக ஜனாதிபதி அவர்கள் அருணுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியை வழங்கியுள்ளார்.
அருண் தம்பிமுத்து போன்ற பலர் தமது சோகக் கதைகளுடன் அன்று நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவர் போன்ற படித்த கல்விமான்கள் பலரும் இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் தாம் சென்று வாழ்ந்த நாடுகளில் கெளரவ மாக தாமுண்டு, தமது தொழிலுண்டு என்று வாழ்ந்து வந்தனர். அதனால்தான் இத் தனை வருடங்கள் கழிந்த பின்னரும் தமது நாட்டை தாய்நாடாக இவர்களால் எண் ணிப் பார்த்து வந்து வாழ முடிகிறது. ஆனால் யுத்தம் காரணமாக அதைச் சாட்சி யாக வைத்து வெளிநாட்டு ஏஜென்ஸிக்காரருக்கு முப்பது இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் வரை பணம் செலுத்தியும், பத்தாம் வகுப்புக்கூட பாஸ் பண்ணாது பட்டப் படிப்பு படித்தது போன்று கள்ளச்சான்றிதழுடன் பொய்யான வங்கிக் கணக்கறிக்கை யும் சமர்ப்பித்து தூதரகங்களை ஏமாற்றியும் வெளிநாடு சென்றவர்களே தாம் பிறந்த நாட்டை தாம் சென்று குடியேறி பிழைப்பு நடத்திவரும் நாடுகளிலிருந்து இன்று தூசித்து வருகின்றனர்.

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் சிலரால் பணம் வழங்கப்பட்டு இவர் கள் இதனை ஒரு தொழிலாகச் செய்து வருகின்றனர். கொடி பிடித்து கோஷம் போடுவதற்கு இவர்களுக்கு தாராளமாகப் பணம் வழங்கப்படுகிறது. இவர்களில் எவரும் உணர்வுகளால் உந்தப்பட்டு கோஷம் எழுப்பவில்லை. பணத்தினால் கவ ரப்பட்டே போலியாக நடிக்கிறார்கள். மதுவருந்திய நிலையில் கையில் திணிக்கப் படும் புலிக்கொடிகளுடன் எழுதிக் கொடுத்துள்ள வசனங்களை உரத்துச் சொல்கிறார்கள்.
இலங்கையில் தமிழருக்கு நல்லதோர் எதிர்காலத்தை விரும்பும் எந்தவொரு புலம்பெயர் தமிழனும் உள்ளூரில் தமிழர் இனியும் அழிவை எதிர்கொள்வதை ஒரு போதும் விரும்பமாட்டான். உணர்வுபூர்வமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் திரு. அருண் தம்பிமுத்து போல அரசாங்கத்துடன் இணைந்து சென்று தமிழரது உரிமைகளைப் பேச்சுநடத்தி வென்றெடுப்பதையே விரும்புவான். ஹோட் டல்களிலும், சுப்பர் மார்க்கெட்டுகளிலும் தினக்கூலிகளாக வேலை செய்யும் தமிழ் இளைஞரை அழைத்து வந்து அதிக பணம் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது இனியும் அழகல்ல. உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோற்றுவிட்டது. சமாதான மாகச் சென்று சகோதரத்துவத்துடன் வாழக்கிடைத்த பல சுற்றுப்பேச்சுவார்த்தை சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் பிரபாகரன், தமிழ்ச் செல்வன், புலித்தேவன், சூசை ஆகியோர் தமிழ் மக்களுடன் உயிருடன் வாழ்ந்திருக்கலாம்.
சமாதானக் கொடியை முதலில் காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை நடு வீதியில் கொன்று, அடுத்துவந்த சந்திரிகா அம்மையாரை கொல்ல முயற்சித்து, பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஏமாற்றி தாம் இன விடுதலைக்காக போராடவில்லை, பயங்கரவாதிகள் என்பதைக் காட்டியமையாலேயே இறுதியில் இன்றைய அரசாங்கத்துடன் அது பலிக்காது அவர்கள் ஒட்டுமொத்தமாக பலியாக நேரிட்டது.
இந்த உண்மைகளை உள்ளூரில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். தமக்காகவெனப் போராடிய புலிகளின் துப்பாக்கிகள் இறுதி யுத்த காலத்தின் இறுதி நேரத்தில் தம்மைப் பதம் பார்த்தமையை தப்பி வந்த தமிழ் மக்கள் தெரிவித்த பின்னரும் தமிழருக்கு இனியும் ஆயுதப் போராட்டம் ஒருபோதும் தேவையில்லை என்ற முடிவிற்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டனர். புலத்தில் வாழும் மக்களுக்கு களத்தில் நடந்தவை முழுமையாகத் தெரியாது. புலிசார்பு எழுச்சி இணையங்கள் கூறும் ஒருபக்கக் கதைகளை உண்மையென நம்பி அங்கிருந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதற்கு புலம்பெயர் தமிழரின் புரிந்துகொள்ளாத் தன்மை இடையூறாக அமைந்து விடக்கூடாது. பேச்சுவார்த்தை மூலமான தீர்வே இனித் தமிழருக்கான தீர்வு எனும் நிலையில் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை உள்ளது. இன்றைய அரசாங்கமும் பேச்சு மூலமான தீர்விற்குத் தான் தயாராக உள்ள தாகவே தெரிவித்துள்ளது. அதனால்தான் தமிழ் மக்களின் ஓரளவு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. சவால் விடுவதும் வெளிநடப்பு செய்வதும், விலகிக் கொள்வதும் தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடாக உள்ளது. அரசுடன் பேச்சை நடத்திவிட்டு வெளியே வந்து அதே அரசாங்கத்தை தாறுமாறாக விமர்சனம் செய்வது தமிழ்க் கூட்டமைப்பின் வழமையானதொரு காரியம். எனினும் அனைத்தையும் தெரிந்திருந்தும் அரசாங்கம் பொறுமையுடன் செயற்பட்டு வருகிறது. அதனைக்கூட சில சந்தர்ப்பங்களில் அரசு பயந்துள்ளது என்று மார்தட்டிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில் பலம், பயம், பலவீனம் எனச் சகலவற்றையும் மறந்து செயற்பட வேண்டியது அரசாங்கம் மற்றும் தமிழ்த் தரப்பினரது தார்மீகக் கடமையும், பொறுப்புமாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் அறியாமைக்கு தமிழ்க் கூட்ட மைப்பு களம் அமைத்துக் கொடுக்கக் கூடாது. உள்ளூரில் நல்லதோர் தீர்வைக் கண்டு நிலையாக சமாதானம் உருவாகிவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் எல்லோ ரும் தாய் நாட்டிற்கே வந்துவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
No comments:
Post a Comment