Monday, June, 18, 2012இலங்கை::தலைமன்னார் - பசியாளை குடியிருப்பு பகுதியில் 773 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பசியாளையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் நபர்களாவர்.
நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்...
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்!
பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் தம்பகல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மாணவனுக்கு பாடம் போதிப்பதாகத் தெரிவித்து தனது வீட்ற்கு வரழைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியர் மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment