Monday, June 18, 2012

சங்மாவை நீங்க ஆதரியுங்க"...கலாமுக்கு ஆதரவு கோரிய மமதாவுக்கு ஜெயலலிதா பதில்!!

Monday, June, 18, 2012
கொல்கத்தா::குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது கட்சி முன்னிறுத்த உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அப்துல்கலாமுக்கு ஆதரவு தரவேண்டும் என்று நேற்று இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி.

அப்துல்கலாமை களம் இறக்குவது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் மமதா பானர்ஜி ஜெயலலிதாவின் ஆதரவைக் கோர முடிவு செய்தார். இதையடுத்து நேற்று இரவு ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலாமை ஆதரிக்குமாறு மமதா கேடுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தாமும் ஒடிஷா முதல்வர் பிஜூ பட்நாயக்கும் ஏற்கெனவே சங்மாவை நிறுத்தியிருக்கிறோம்.. நீங்கள் சங்மாவை ஆதரியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த பதிலில் மமதா அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மனம் தளராத மமதா, கலாமுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment