Monday, June, 18, 2012இலங்கை::இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் போது புதிய நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வேறும் ஓர் நாட்டில் குடியுரிமை உடைய நபர் ஒருவர்இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தால், முதலில் ஐந்து ஆண்டுகள்வதிவிட உரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளின் பின்னரே குறித்த நபருக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் எவ்வாறு குடிரிமை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்களை வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக இலங்கையில் குடியுரிமை கோரப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக வி;ண்ணப்பிப்போர் கட்டணமாக இரண்டு தவணைக்குள் 200,000 ரூபாவினை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.
சட்ட திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கில்இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment