Monday, June, 18, 2012இலங்கை::புலிகளினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொடூரச் சம்பவங்களை சிலர் மறந்து விட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இன்று சிலருக்கு 2004ஆம் ஆண்டு மறந்து விட்டது. தலைநகர் கொழும்பைச் சேர்ந்த மக்கள் மரண அச்சத்தினால் வாழ்ந்து வந்தனர்.
நாட்டுக்கும், இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் ஏற்படவிருந்த பாரிய அழிவினை தடுக்கும் நோக்கில் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுனாமி ஏற்பட்ட காலத்தில் புலிகள் தனியான ஓர் கமிட்டியை அமைத்திருந்தால் இன்று நாடு பிளவுபட்டிருக்கும்.
சுனாமி அழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க புலிகள் தனியாக கமிட்டி அமைக்க முடியாது என தீர்ப்பு அளித்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புலிகள் சுனாமி கமிட்டியை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து ஏழாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வின் போது சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment