Monday, June 11, 2012

இலங்கைக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட காரணத்தினால் ஊடகவியலாளர் லீக்கு எதிராக நடவடிக்கை!

Monday, June, 11, 2012
இலங்கைக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட காரணத்தினால் ஊடகவியலாளர் லீக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இன்னர்சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஊடகங்களில் இந்தத் தகவல் திரிபுபடுத்தி பிரசூரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் விவகாரம் தொடர்பான செய்தி கேரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர் மத்தேயூ லீக்கு எதிரான விசாரணைகள் தொடர்பான செய்திகள் இலங்கை ஊடகங்களில் பிழையாக வெளியிடப்பட்டுள்ளன.

உண்மையில் இலங்கைக்கு பாதகமான செய்திகளை வெளியிட்ட காரணத்தினால் லீக்கு எதிராக விசாரணை நடத்தப்படவில்லை என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை பிரிவின் பொறுப்பாளராக தற்போதைய இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே கடமையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலித கொஹணேவிடம் மோசடியான முறையில் வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இன்னர்சிற்றி பிரஸ் ஊடகவியலாளர் மத்தேயூ லீக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment