Monday, June 11, 2012

இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது பிளாஸ்டிக் கூடை சட்டம்!

Monday, June, 11, 2012
இலங்கை::மரக்கறி மற்றும் பழ வகைகளை ஏற்றிச் செல்லும் போது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தை இன்று முதல் மீண்டும் செயற்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சட்டம் தெரிவுசெய்யப்பட்ட 11 மரக்கறி மற்றும் பழ வகைகள் தொடர்பில் நடைமுறைக்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த சட்டத்தின் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வரத்தகர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே இன்றும் வழமைபோல் மரக்கறி வகைகள் சாக்குகளில் கட்டப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மெனிங் சந்தையின் வர்த்தக சங்க செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும் விவசாயிகள் எந்த முறையில் மரக்கறி வகைகளை கொண்டுவந்தாலும் அதனை தமது வர்த்தகர்கள் கொள்வனவு செய்வார்கள் என மெனிங் சந்தையின் பிரதம ஏற்பாட்டாளர் எச்.எல்.சந்தனரத்ன தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment