Monday, June 11, 2012

ஐ.நாவின் கோரிக்கைக்கு அரசாங்கம் பதில்!

Monday, June, 11, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில், அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எதிர்வரும் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவுகள் துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் குழு ஒன்றை அனுப்ப, மனித உரிமைகள் ஆணைக்குழு கோரி இருந்தது.

அத்துடன் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்த கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் வாரம் அரசாங்கத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment