Monday, June, 11, 2012இலங்கை::கட்டுவன வைத்தியசாலையின் தாதியொருரை கூரிய ஆயுதத்தால் குத்திய அம்பியூலன்ஸ் சாரதி பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான தாதி தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய அம்பியூலன்ஸ் சாரதி கட்டுவன வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனையும் இன்று நடைபெறவுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment