Monday, June 11, 2012

ஒபாமா, ஹிலாரி தலைக்கு ஒட்டகம், கோழி பரிசு!!

Monday, June, 11, 2012
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பற்றி தகவல் தந்தால், 10 ஒட்டகம், 10 கோழி, 10 சேவல் பரிசு தரப்படும் என்று சோமாலியா தீவிரவாதிகள் எகத்தாளமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து கொன்றன. இதன்பின், அல்கய்தா இயக்கத்தின் அடுத்துள்ள தலைவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அல்கய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள சோமாலியா நாட்டு தீவிரவாதிகளை அமெரிக்கா குறிவைத்துள்ளது.

சோமாலியாவில் ஷபாப் அல் முஜாகிதீன் என்ற தீவிரவாதிகள் இயக்கத்தின் தலைவர் முகமத் கலாப் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேரின் தலைக்கு தலா 50 லட்சம் டாலர் வீதம் அமெரிக்கா அறிவித்தது. மேலும், ஷபாப் அல் இயக்கத்தின் நிறுவனர் அகமத் அப்தி முகமத் தலைக்கு 70 லட்சம் டாலர் அறிவித்தது. கடந்த 7ம் தேதி இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, முகமத் கலால் கடந்த வெள்ளியன்று தொழுகை முடிந்த பின்பு தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குறித்து எகத்தாளமாக விமர்சித்தார். மேலும், அவர் பேசுகையில், ‘ஒபாமா ஒளிந்திருக்கும் இடத்தை பற்றி தகவல் தருவோருக்கு 10 ஒட்டகங்களும், மூதாட்டி ஹிலாரி இருப்பிடத்தை பற்றி தகவல் தருவோருக்கு 10 கோழி, 10 சேவல்களும் தரப்படும்’ என்று கொக்கரித்தார். இத்தகவலை தீவிரவாதிகளை கண்காணிக்கும் எஸ்ஐடிஇ உளவு அமைப்பு கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment