Monday, June 11, 2012

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் பதவியேற்றார்!

Monday, June, 11, 2012
புதுடெல்லி::நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி, நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட்டார். வி.எஸ்.சம்பத், வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.எஸ். சம்பத் என்றழைக்கப்படும் வீரவள்ளி சுந்தரம் சம்பத், 1973ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த சம்பத், ஆந்திர மாநில அரசு பணிகளில் அதிகாரியாக பணியாற்றியவர்.

இதனையடுத்து, பலத்த போட்டிக்கு இடையே கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சம்பத் நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றிய சம்பத், தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment