Sunday, June 3, 2012

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜே.வி.பி தீர்வுத்திட்டம் தயாரித்து முன் வைக்கவுள்ளது!

Sunday 3rd of June 2012
இலங்கை::இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜே.வி.பி தீர்வுத்திட்டமொன்றைத் தயாரித்து நாட்டுக்கு முன் வைக்கவுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு ஆலோசனைகளை ஜே.வி.பி. இப்போது தயாரித்து வருகின்றது. வெகு விரைவில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் அங்கீகாரம் பெற்றதும் நாட்டு மக்கள் முன் வைக்கப்படும்.

இனப்பிரச்சினை தீர்வுக்காகவென சர்வக் கட்சி மாநாடு நேரடிப் பேச்சு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவென அரசாங்கம் காலத்தைக் கடத்துவதாகவே ஜே.வி.பி. கருதுகின்றது.

ஜே.வி.பி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காததற்கும் இதுவே காரணமெனவும் டில்வின் சில்வா தெரிவித்தார்

No comments:

Post a Comment