Sunday, June 3, 2012

ஆப்கனில் தாக்குதல் 30 தீவிரவாதிகள் பலி!

Sunday 3rd of June 2012
காபூல்::ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், ஆப்கன் ராணுவம் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் 30 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஹெல்மண்ட், உருஸ்கன், லோகர் மற்றும் காஸ்னி பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூட்டு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடங்களை ஆப்கன் ராணுவ துணையுடன் போலீசார் மற்றும் நேட்டோ படையினர் சுற்றி வளைத்தனர். சிக்கி கொண்டதை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு படையினர் நடத்திய தாக்குதலில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்து சிக்கினர். இதுபற்றி தலிபான் தரப்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் : 14 பேர் உடல் சிதறி பலி!

காபூல்::ஆப்கானிஸ்தானில் அமெரிக்க முகாம்கள் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 14 பேர் உடல் சிதறி பலியாயினர் என்று நேட்டோ தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த முகாம் மீது நேற்று தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பிய டிரக்கை மோதி வெடிக்க செய்தனர். உஷாரடைந்த வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 14 ஆப்கானிஸ்தானியர்கள் பரிதாபமாக இறந்தனர். அமெரிக்க வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இறந்தவர்கள் அனைவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் என்று நேட்டோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோஸ்ட் மாகாண போலீஸ் தலைவர் கூறுகையில், இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர் என்றார்
.

No comments:

Post a Comment