Sunday, June 3, 2012

சிறைக் கைதிகளை பரிமாற்றிக் கொள்ள அரசாங்கம் ஒப்பந்தம்!

Sunday 3rd of June 2012
இலங்கை::நாடுகளுக்கிடையில் சிறைக் கைதிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக பாகிஸ்தானுடன் சிறைக்கைதிகளை பரிமாற்றிக் கொள்ளவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இந்தியா, மாலைத்தீவு, ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளுடனும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 22 பாகிஸ்தான் கைதிகள் உள்ளதாகவும் அவர்களை அவர்களது நாட்டிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைய அனைத்து கைதிகளையும் ஒரே நேரத்தில் ஒப்படைக்க முடியாது என தெரிவித்த அமைச்சர் ஒரு சந்தர்ப்பத்தில் இரு கைதிகளை மாத்திரமே விமானத்தின் மூலம் அனுப்பிவைக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment