Monday, June 25, 2012

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஹெரோயின்டன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது!

Monday, June 25, 2012
இலங்கை::கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜை ஒருவரின் உடலுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவரைப் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறி;த்த நபர் பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து நேற்று முன்தினம் 23ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பயணிகள் வழக்கம்போல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் விசாரணைகள் நடத்தியபோது அவரது வயிற்றுப் பகுதியில் ஹெரோயின் உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரின் உடலில் இருந்து ஏற்கனவே 20 ஹெரோயின் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில உருண்டைகள் இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது...

போலி பயண ஆவணங்களை வைத்திருந்த இலங்கை பிரஜை ஒருவர் பிஜியில் கைது!

போலி பயண ஆவணங்களை வைத்திருந்த இலங்கை பிரஜை ஒருவர் இன்று பிஜி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த இலங்கை மீது போலி பயண ஆவணங்கள் தயாரித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பிஜி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேகநபரிடம் இருந்து போலி பிரித்தானிய மற்றும் இந்திய கடவுச்சீட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...

போலி யூரோ நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நகைக் கொள்வனவில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது!

போலி யூரோ நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நகைக் கொள்வனவில் ஈடுபட முயற்சித்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகைக்கடையொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து 21 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து கெப் ரக வாகனமொன்றையும் கைப்பற்றிய பொலிஸார், சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் போலி நாணயத்தாள் விசாரணைப் பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்...

ஆயுதங்களுடன் வெள்ளை வேன் ஒன்றில் நடமாடிய குழுவினரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டார்!

நாவலப்பிட்டி பகுதியில் ஆயுதங்களுடன் வெள்ளை வேன் ஒன்றில் நடமாடிய குழுவினரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நாவலப்பிட்டிய நீதவான் இன்று உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்கு இடமான மூவர் வெள்ளை வேன் ஒன்றில் குறித்த பிரதேசத்தில் நடமாடி வருவதாக தமக்கு தகவல் கிடைத்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை குறித்த சந்கேதநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட சில பொருட்களும் அவர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை அவர்கள் பயன்படுத்திய வாகனம் 30 இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வேட்டையாடுவதற்காக சென்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாவலப்பிட்டி உலப்பனைப் பிரதேசத்தை சேர்ந்த மூன்று வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment