Monday, June 25, 2012இலங்கை::இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்டுத்துவது தொடர்பில் அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார். எனினும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அதில் குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயன்முறை கூறப்பட்டுள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
இந்த செயன்முறை திட்டம் கடந்த மே 18 ஆம் திகதி ஜி.எல். பீரிஸினால் ஹிலாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சின் கண்காணிப்பாளரான பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறுகிய காலத்தில் செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்த இலங்கைக் குழு உறுதியளித்துள்ளது.
நடுத்தர மற்றும் இறுதி யுத்தம் தொடர்பான நீண்ட கால பரிந்துரைகள் உரிய காலங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கைக்குழு அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.
இறுதிப் பரிந்துரைகள் 8 அம்சங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் தேசியப் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனையே ஹிலாரி கிளின்டனும் செயன்திறன் மிக்க நல்ல திட்டம் ஒன்றை இலங்கை கையளித்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தாம் அமெரிக்கர்களிடம் எவ்வித செயன்முறை ஆவணங்களையும் கையளிக்கவில்லை என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தொடர்ந்தும் கூறி வருகிறார்.
எனவே தாம் பிரசுரித்துள்ள இந்தச் செய்தியை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மறுப்பாரானால் அமெரிக்காவிடம் கையளித்த உறுதி மொழி ஆவணத்தை முழுமையாக வெளியிடப் போவதாக சண்டே லீடர் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment