Monday, June 25, 2012புதுடில்லி::மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய சதிகாரனை இன்று சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது.
மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் முக்கிய இடங்களில் கடந்த 2008 நவ 26 ம்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் குண்டுகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தினர். 164 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
இந்நிலையில் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் சையீது ஜெயுபுதீன் என்ற அபு ஹம்சா என்பவன் பிடிபட்டுள்ளான். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்தவன். மும்பை தாக்குதல் நடந்த போது பாகிஸ்தானில் இருந்தபடி தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது.
ஹம்சாவுக்கு பெங்களூரூ ஸ்டேடியம் தாக்கப்பட்ட வழக்கு, குஜராத்தில் நடந்த சில வன்சம்பவங்களுக்கும் இவனுக்கு தொடர்பு உள்ளளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவனை கைது செய்திருப்பது மூலம் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல முக்கிய சாட்சியங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது...
குஜராத்தில் சில வழக்குகளிலும் தொடர்புடைய அபு தற்போது கோர்ட் உத்தரவுப்படி 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment