Monday, June 25, 2012

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை:சம்பந்தமில்லாத புலம்பல்..வழக்கம் போல (23ம் புலி கேசி) கலைஞரின் அறிக்கை!

Monday, June 25, 2012
சென்னை::தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என,(23ம் புலி கேசி) .தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல் பரப்புக்கு வருவதாகவும், சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் இனத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் ராஜபக்ஷே குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவின் பெயரையோ, தமிழகத்தின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்.இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிப்பதாக, தமிழக மீனவர்களை கைது செய்தால், இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே, இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் உடன் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சமரச பேச்சு வார்த்தையில், ஒரு மாத காலத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை, துறையின் சார்பாக எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. பின், இரண்டு மாத காலமாகியும், இந்நாள் வரை அரசாணை வெளியிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், அ.தி.மு.க., அரசு காலதாமதம் செய்து வருகிறது. ஒரு வேளை முதல்வர் கொடநாட்டிலிருந்து திரும்பிய பின், நேரம் இருந்தால் இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவார்.இவ்வாறு (23ம் புலி கேசி) கருணாநிதி கூறியுள்ளார்.

எதற்காக சிறை நிரப்புகிறோம்? சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளக்குவதற்காக, தெருமுனை கூட்டங்களை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. தி.மு.க., சிறப்பு செயற்குழு கூட்டத்தில், தமிழக அரசை கண்டித்து, ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. போராட்டம் நடத்துவதன் நோக்கம் குறித்து, வரும் 28ம் தேதியில் இருந்து ஜூலை 1 வரை, விளக்க, தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெறும் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ""ஜூலை 1ம் தேதி, தாம்பரத்தில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசுகிறார். ஜூன் 29, கரூரில், பொதுச்செயலர் அன்பழகன், ஜூலை 1, கும்பகோணம், 2ம் தேதி மயிலாடுதுறையில், பொருளாளர் ஸ்டாலின், ஜூன் 28, சிதம்பரத்தில் கனிமொழி, வடசென்னையில் ஆ.ராசா, ஜூன் 30, தென்சென்னையில் குஷ்பு சுந்தர் மற்றும் பல நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் நடக்க இருக்கிற கூட்டங்களில் பேசுகின்றனர்'' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பெயர் இடம்பெற வில்லை.

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை:சம்பந்தமில்லாத புலம்பல்..வழக்கம் போல (23ம் புலி கேசி) கலைஞரின் அறிக்கை!

No comments:

Post a Comment