Monday, June 25, 2012

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இனி வரும்காலங்களில் ஐ.ஓ.எம். எனப்படும் சர்வதேச குடிவரவு அமைப்பின் அடையாள அட்டை விநியோகம்செய்யப்பட மாட்டாது!

Monday, June 25, 2012
இலங்கை::முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இனி வரும்காலங்களில் ஐ.ஓ.எம். எனப்படும் சர்வதேச குடிவரவு அமைப்பின் அடையாள அட்டை விநியோகம்செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு இனி ஐ.ஓ.எம். அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐ.ஓ.எம். இனால் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாளஅட்டைகளை மீள சேகரிக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகத்தெரிவிக்கப்படுகிறது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிபோராளிகளுக்கு ஐ.ஓ.எம் அடையாள அட்டைகளை விநியோகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிபோராளிகளுக்கு எதிராக ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த அடையாள அட்டைகள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாகஇராணுப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

புனாழ்வாழ்வு அளிக்கப்பட்ட புலிபோராளிகள் சமூகத்தில் ஒடுக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக அவர்களுக்கு தனியான அடையாள அட்டை விநியோகம் செய்யும்நடவடிக்கையை இடைநிறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment