Monday, June 25, 2012இலங்கை::புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு தமிழர்களின் விருப்பு வெறுப்புவெறுப்புக்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றி வருவதாக ஊடக அமைச்சர் கெஹலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு இராணுவ மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பான கூட்டமைப்பின் பிரச்சாரங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ளுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புலம்பெயர் தமிழர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ளும் எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் நெகிழ்வுப் போக்கைப்பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் பலர் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதாகவும், காணிகள்அபகரிக்கப்பட்டிருந்தால் நீதியின் உதவியை நாட முடியும் எனவும் கெஹலிய ரம்புக்வெல்லகுறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment