Monday, June 25, 2012

சிறுவாணி ஆற்றில் கேரளா அணை : சுப்ரீம் கோர்ட்டை அணுக தமிழக அரசு திட்டம்!

Monday, June 25, 2012
ஈரோடு::சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முயன்றால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கூறினார். ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி: முல்லை பெரியாறு அணையில் உள்ள 7 ஓட்டைகளை அடைக்கும் பணிகள் நிறைவடைந்தன. ஆயிரம் சிமென்ட் மூட்டைகளை கொண்டு ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களின் உரிமைகளை காக்க எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தமிழக அரசு உரிமையை நிலை நாட்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. அணையை கட்ட அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். காவிரி ஆற்றின் நீர் கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை கட்டுவதற்காக முதல்வர் ரூ.1,500 கோடி ஒதுக்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீரால் மாசுபடுவதை தடுக்க பேபி கால்வாய் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகளுடன் கலந்து பேசி வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி விட்டு பணிகள் தொடங்கும். வலதுகரையில் வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கும், வாகனங்கள் சென்று வருவதற்கும் புதிய சாலை அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment