Monday, June 25, 2012

கூட்டமைப்பின் காணி அபகரிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை – முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது!

Monday, June 25, 2012
இலங்கை::அரசாங்கம் பலவந்தமாக மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு ஆதரளிக்கவில்லை என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காணி அபகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸூம் இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும்எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்அவற்றுக்கு அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் பசீர்சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment