Saturday, June, 16, 2012இலங்கை::தப்பிச் சென்ற படைச் சிப்பாய்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற படைச் சிப்பாய்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20, 000 படைச் சிப்பாய்கள் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 680, ஏப்ரல் மாதம் 484 மற்றும் மே மாதம் 617 படைச் சிப்பாய்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் 20 இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்களுக்கே தொடர்பு இருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment