Sunday, June 17, 2012

கலாநிதி பாலித்த கோஹண உப தலைவராக நியமனம்!

Sunday, June, 17, 2012
இலங்கை::சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் உப தலைவராக நியூயோர்க்கிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பான கொள்கைகளுக்கு அமைவான உறுப்பு நாடுகளின் ஏகமனதான அனுமதியுடன் பாலித்த கோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1982 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தக் கொள்கையின் கீழ், சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பான புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment