Saturday, June 16, 2012

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரிவாக்கம்!

Saturday, June, 16, 2012
இலங்கை::இதன் ஆரம்ப வைபவம் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்றது.

இதில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி மற்றும் மீள் குடியேற்ற பிரதியமை;சசரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான விநாயக மூர்த்தி முரளிதரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள், தெண்ணிலங்கையிலிருந்து வருகை தந்த மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் பிரதேச முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்கள் தோறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிளைகளை அங்குரார்ப்பணம் செய்தல் மற்றும் மக்களை சந்தித்தல், அவர்களின் குறைகளை கேட்டறிதல் போன்ற நடவடிக்கைகளுக்காக கட்சியின் முக்கியஸ்த்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

இன்றும் நாளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இவ் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 30 வருடத்தில் முதன்முறையாக அதிகளவான அமைச்சர்களைக் கொண்ட பட்டாளம் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளது.மட்டக்களப்பு மற்றும் கல்குடா தேர்தல் தொகுதிகளில் தமது ஆரம்ப விரிவாக்க செயற்பாடுகளை இவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என பல்வேறு தரப்பினராலும் ஆருடங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த விரிவாக்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உதவித்தலைவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் வழிநடத்தி வருகின்றார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களான இராஜன் மயில்வானம், அருண்தம்பிமுத்து, ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் இந்த விரிவாக்கல் செயற்றிட்டத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தமது கட்சிக்கு உறுப்பினர்களை இணைக்கும் செயற்றிட்டத்தை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள், மக்களின் குறைபாடுகளையும் மக்களிடம் அமைச்சர்கள் நேரடியாக அறிந்து கொள்கின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாணசபை தேர்லில் ஆளும் கட்சியே இம்முறையும் மாகாணசபையினை கைப்பற்றும் என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முதலமைச்சராக தமிழர் ஒருவர் வரவேண்டுமாகவிருந்தால் சிறந்தமுறையில் தமது வாக்குகளை பிரயோக்கவேண்டும் என தெரிவித்தார்.

கடந்த முறை போன்று அல்லாமல் இம்முறை சிறந்த ஒரு முதலமைச்சரை நாங்கள் அனுப்புவதன் மூலமே எமது பகுதியை சிறந்தமுறையில் அபிவிருத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட புத்திஜீவகள் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment