Wednesday, June 20, 2012

புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது!

Wednesday, June 20, 2012
இலங்கை::புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட சூரி என்பவர் அவரது காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை, ஆயுதங்களை வைத்திருந்தமை வாகனங்களை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவரைப் பொலிஸார் தேடியவேளை, சூரி தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து இவரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment