Saturday, June, 09, 2012இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோ காட்சிகள் போலியானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் இன்டிபென்டன்ட் என்னும் பத்திரிகை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் புனையப்பட்டவை எனவும், இவை பிரச்சார நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டவை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தையும், படையினரையும் இழிவு படுத்தும் நோக்கில் இவ்வாறான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம் சுத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் தமிழ் மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துவதாக இந்த வீடியோக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
போலியான வீடியோக் காட்சிகளை தயாரித்து பிரச்சாரம் செய்வதில் புலி ஆதரவாளர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
No comments:
Post a Comment