Saturday, June, 09, 2012இலங்கை::இலங்கை இராணுவத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்ட போலியான 32 வீடியோ படங்கள் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது. இந்த போலி வீடியோக்களை பிரித்தானிய ஊடகங்களுக்கு வழங்கியவர், வாசுகி முருகேசன் என்ற லண்டனில் உள்ள புலிகளின் சட்டத்தரணி என தெரியவந்துள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி லண்டன் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இந்த வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ படங்கள் கையடக்க தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment