Sunday, June 10, 2012

சமாதானத்தை சீர்குலைக்க முயலும் புலம்பெயர் (புலி ஆதரவு)சமூக தீய சக்திகள் - பாபு சர்மா குருக்கள் கடும் கண்டனம்!

Sunday, June, 10, 2012
இலங்கை::சமாதானத்தை சீர்குலைக்க முயலும் புலம்பெயர் (புலி ஆதரவு)சமூக தீய சக்திகள் - பாபு சர்மா குருக்கள் கடும் கண்டனம்!:-

அமைதியான சமாதானக் காற்றை சுவாசிக்கும் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வையும் இன குரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர் (புலி ஆதரவு) தமிழர்கள் நடந்து கொள்ள கூடாதென இந்து சமய இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்று தசாப்த கால துயர்களை துடைத்தெறிந்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றத் தாழ்வற்ற சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றார். சிறுபான்மையென்ற சொற்பதத்திற்கே இங்கு இடமில்லை. சமத்துவமான, சகோதரத்துவமான சமுதாயமொன்று மறுமலர்ச்சி காணும் இவ்வேளையில், புலம்பெயர் (புலி ஆதரவு)தமிழர் காட்டும் உணர்வுகள் பேரழிவுக்கே வித்திடும்.

சமரசப் பேச்சால் காண வேண்டிய தீர்வுகளை வெறுமனே ஆர்ப்பாட்டத்தாலும் கோஷங்களாலும் பெற முடியாதென்பதை உணர வேண்டும் என்று தனது அறிக்கையில் பாபு சர்மா குருக்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment