Sunday, June 10, 2012

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூது மிச்சல் சிசனுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, June, 10, 2012
இலங்கை::இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூது மிச்சல் சிசனுக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் நிலைமை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.

மிச்சல் சிசன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்தத் தடவை அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் கருத்துக்கள் தொடர்பில் மட்டுமே அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கப்பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment