Sunday, June 10, 2012

இனப்பிரச்சினை தீர்வுக்கு குந்தகமாக இருக்கும் புலம்பெயர் நாட்டு புலிகள்!உள்நாட்டு அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் ஈனச் செயலில் ஈடுபாடு-பாலரவிசங்கர சிவாச்சாரி

Sunday, June, 10, 2012
இலங்கை:: தீர்வுக்கு குந்தகமாக இருக்கும் புலம் பெயர் நாட்டு புலிகள்!
உள்நாட்டு அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஈனச் செயலில் ஈடுபாடு: சர்வதேச இந்து மத குரு பீடத்தின் தலைவர் தேசபந்து பாலரவி சங்கர சிவாச்சாரியார் கடும் கண்டனத்துடன் சீறிப்பாய்ச்சல்:-

கேள்வி: எலிசபெத் மகாரணியின் வைர விழாவில் கலந்து கொள்ளச் சென்ற நமது ஜனாதிபதி லண்டனில் இருக்கும் போது நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக நீங்கள் என்ன கருதுகின்aர்கள்?

பதில்: எமது ஜனாதிபதி இதற்கு முன்னரும் பிரிட்டன் சென்ற போது சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இம்முறையும் அவ்வாறான சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தவித பயனுமற்ற இத்தகைய கீழ்த்தரமான செயல்களால் ஜனாதிபதிக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. அவரது மதிப்பு குறையப் போவதுமில்லை. அத்தோடு நம் நாட்டுக்கு அதனால் எந்தவிதமான தீமையும் ஏற்படப் போவதுமில்லை. உண்மையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் பிரித்தானிய அரசுக்கும் தொடர்பில்லை. அது போலவே புலம் பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களுக்கும் கூட இந்தச் செயற்பாட்டில் பங்கில்லை. ஒரு வகையிலே புலம் பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களும் புலிகளின் அடாவடித்தனங்களாலும் பயமுறுத்தலாலும் பாதிக்கப்பட்டவர்களே. உழைப்பின் பெரும் பகுதியை விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் துரதிஷ்ட வசமான ஒரு பாதையிலே செலவிட்டனர். இன்று புலம் பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.

போர் முடிந்த கையோடு அழிவுற்ற வடக்கு - கிழக்குப் பிரதேசங்களை பாரிய அளவில் அரசு அபிவிருத்தி செய்து வருவதை அந்த மக்கள் அறிவார்கள். பொருளாதார ரீதியாக வடக்கு - கிழக்கு மக்கள் சுபீட்சம் பெற அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதென்பதை நன்கறிவர். அதனால்தான் அவர்களில் சிலர் இலங்கை அரசுடன் பொருளாதார மேம்பாடு தொடர்பான ஒப்பந்தப் பரிமாற்றம் செய்யவும் இலங்கையிலே முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர்.

புலம் பெயர்ந்த மக்கள் போரிலே அழிவுற்ற இந்த நாட்டைக் கட்டியெ ழுப்ப குறிப்பாக வடக்கு - கிழ க்கை சீர்படுத்த அன்புக்கரம் நீட்ட வேண்டுமென ஜனாதிபதி ஏற்க னவே உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

எனவே புலம் பெயர் தமிழர்களுக்கும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லையென்றே நான் கருதுகின்றேன்.

கேள்வி: அவ்வாறாயின் இந்தச் செயலுக்கு காரணமானவர்கள் யார் என நினைக்கின்aர்கள்?

பதில்: இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் வழி கெட்ட ஒரு கூட்டமே. தப்பியோடிய புலிகளும் அங்குள்ள புலி ஆதரவாளர்களுமே இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகின்றது. பழிவாங்கும் நோக்கோடு பயனற்ற இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் இவ்வித செயல்களால் தமிழ் மக்கள் பயனடையப் போவதில்லை. மாறாக இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடிக்கவும் மென்மேலும் சிக்கலாக்கவுமே இந்த நடவடிக்கை பயன்படும். நமது மக்கள் அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் அடைய இருக்கும் நன்மைகளை இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கும். கடும் போக்குள்ள பேரினவாதிகளுக்கு உறைப்பாகக் கதைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அங்கே நடந்த எதிர்ப்பு இங்கு நிம்மதியாக வாழும் தமிழ் மக்களின் வாழ்விலே பாதிப்பை ஏற்படுத்த காரணமாகவும் அமையலாம். போர் முடிவின் பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லுறவு வளர்ந்து வரும் இவ்வேளையில் இவ்வாறான சம்பவங்கள் இனத்தின் விடிவு முயற்சிக்கு நாமே குந்தகம் விளைவித்ததாக முடியும் என்பதை பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கையிலே ஏற்பட்ட போர் நடவடிக்கைகளால் சில நாடுகளுக்கு நன்மையுண்டு. அந்த நாடுகளின் ஆயுத விற்பனை அதிகரிக்கும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தாயம் என்பர். கெட்ட சிந்தனையுள்ளவர்களுக்கு குழப்பங்கள் சந்தோசமாக அமையும். வெளிநாடுகளில் இனத்தின் பெயரால் பணம் கறந்து குஷியாக வாழுவோருக்கும் இத்தகைய குழப்பங்கள் தேவை. அவ்வாறு கீழ்த்தர, சுயநல சிந்தனையுடையவர்கள் தான் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்களே தவிர புலம் பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்கள் இதற்கு ஆதரவில்லையென்பதை நான் திடமாக அறிவேன்.

குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடி ஏந்தியிருக்கின்றனர். எனவே தப்பியோடிய புலிகளும் வெளிநாடுகளில் இருந்து புலிகளை வளர்த்தவர்களும் புலி ஆதரவாளர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். புலிகள் இயக்கம் இலங்கையில் மட்டுமின்றி பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியும் தடை செய்யப்பட வேண்டியதே.

கீழ் நாடுகளுக்கு ஜனநாயக விழுமியங்களைக் கற்பித்த பிரிட்டன் உண்மையான ஒரு ஜனநாயக நாடாக இருந்திருந்ததால் புலிக்கொடியை தடை செய்திருக்க வேண்டும். புலிகளையும் கட்டுப்படுத்தி யிருக்க வேண்டும்.

தங்கள் மகாராணியின் வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற விருந்தாளிகளை மதிப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதும் அந்த நாட்டு அரசின் தலையாய கடமை. தங்கள் கடமையை சரியாக மேற்கொள்ள முடியாத பிரிட்டன் ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. நடந்து முடிந்த சம்பவங்களை யிட்டு எமது நாடு பெரிதும் கவலைப் படுகின்றது. இனிமேலும் இவ்வாறான விரும்பத்தகாத செயல்கள் நடைபெறாது. தடைசெய்ய வேண்டிய பொறுப்பு அந்த நாட்டு அரசுக்கு உள்ளது.


கேள்வி: யாழ்ப்பாணத்தில் நடந்த மே தினக் கொண்டாட்டத்தில் சம்பந்தர் ஐயா தேசியக் கொடி ஏந்திய விவகாரம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே.

பதில்: ஜனநாயக ஆட்சி முறைமை நடைமுறையில் உள்ள நம் நாட்டிலே கட்சி அடிப்படையிலான ஆட்சி நடைபெறுகின்றது. அரசின் தீர்மானங்களுக்கமைய தேர்தல்கள் நடைபெறுகின்றன. போட்டியிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். பாராளுமன்றத் தெரிவுக்கும் ஏனைய பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத் தெரிவுக்கும் உட்பட்ட அரசில் வாதிகள் அவர்கள் எந்தக் கட்சியை சார்ந்திருந்த போதும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியவர்கள். ஆட்சியில் பங்கு கொள்ளும் உறுப்பினர்கள் இலங்கை யின் ஜனநாயக சோஷ லிசக் குடியர சுக்கு விசுவாச மாக விருந்து நாட்டு நலனுக்கு உழைப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். எனவே, அவ்வாறு சத்தி யம் செய்த வர்கள் கட்சி களின் கருத்து வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாது தேசத்துக்கு விசுவாசமாகவிருந்து தேசிய நிகழ்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியவர்கள் தேசிய கீதம் ஓர் இனத்துக்கு மட்டும் உரியதல்ல. தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுகின்றது என்பதற்காக அதை நாம் புறக்கணிக்க முடியாது. உரியபடி மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளோம். அது போலத்தான் இலங்கையின் தேசியக் கொடி தேசத்தின் கொடி. அது ஓர் இனத்துக்கு மட்டும் உரியதல்ல. எல்லா இனங்களுக்கும் உரித்தான சின்னங்களடங்கிய அர்த்த புஷ்டியான கொடியது. எந்த ஓர் இலங்கை மகனும் அதை அவமதிக்க முடியாது. ஒவ்வொரு இலங்கையனும் இவ்வாறு தேசியக் கொடியையோ, தேசியக் கீதத்தையோ அலட்சியப்படுத்த முடியாது. சம்பந்தன் ஐயா முதிர்ச்சி பெற்ற ஓர் அரசில்வாதி. சிந்தித்துச் செயலாற்றும் சிறப்பு மிக்கவர். ஒரு தேசிய நிகழ்விலே தேசியக் கொடியை அவர் கையில் எடுத்ததைக் காரணமாக வைத்து அவரை விமர்சிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. விமர்சித்தவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள் அரசியல் பிரதிநிதிகளாக இருந்து அரசிடம் சம்பளம் பெறுவதில்லையா? சலுகைகளை அனுபவிப்பதில்லையா? அப்படியானால் விமர்சிப்பவர்கள் அரசிடமிருந்து எதையுமே பெறாதவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியுமா?

எனவே, நாட்டுக்கு விசுவாசமாக கொடி பிடித்த விவகாரத்தை குழப்பமாக்கி அதிலே குளிர்காய்வது எந்த வகையிலும் பொருத்தமில்லை என்பதே என் கருத்து.


கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காமை பற்றி என்ன கூறுகின்aர்கள்?

பதில்: கடந்த பல தசாப்தங்களாக இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படாத நிலையில் பிரச்சினைகள் தொடருகின்றன. இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசுகள் தீர்வு முயற்சிகளை முன்வைத்த போது எதிரணியின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் தீர்வு முயற்சிகள் பயனளிக்கவில்லை. தீர்வு சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்ட புலிகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்காத காரணத்தினாலும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை.

தற்போது இனப்பிரச்சினைத் தீர்வை மேற்கொள்ள அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை யுள்ளது. எவ்வாறாயினும் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டு மென்ற வைராக்கியமான மனநிலை யில் ஜனாதிபதி செயல்பட்டு வருகின்றார். அதற்காக அவர் இதயசுத்தியுடன் கருமமாற்றுகின்றார். கடந்த கால பட்டறிவு அனுபவங் களை சீராக ஆராய்ந்த பின்னர் தான் ஜனாதிபதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கத் தீர்மானித்தார். இந்த அமைப்பிலே அரச கட்சிகளும் எதிரணிக் கட்சிக ளும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பேச்சு வார்த்தைகள் மூலம் பெறப்படும் தீர்வானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமை யும்.

கடும்போக்காளர்கள் அரச தரப் பிலும் எதிர்த்தரப்பிலும் உள்ளனர். அவர்களையும் உள்ளடக்கி அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பெறப்படும் தீர்வாக அது அமையுமென எதிர் பார்க்கலாம். அவ்வாறான தீர்வு பற்றி யாரும் விமர்சிக்க சந்தர்ப்பம் இருக்கமாட்டாது. எனவே இன நலனில் அக்கறை கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு இனம் சார்ந்த நலனுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்பாப்பும் அதுவே. புத்திஜீவிகளும் புலம் பெயர் பொதுமக்களும் குறிப்பிட்ட குழுவில் பங்கு கொள்ளுமாறு கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் - தமிழ் இன ஒற்றுமை தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்: இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் எனக் கருதப்படுபவர்கள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களுமே. வடக்கு - கிழக்கிலே பல நூறு ஆண்டுகளாக அடுத்தடுத்த கிராமங்களிலும் ஒரே கிராமத்திலும் இந்த மக்கள் செறிந்தும் கலந்தும் வாழ்கின்றனர்.

முஸ்லிம் - தமிழ் பொதுமக்கள் மதம், சமய வழிபாடுகளில் வேறுபட்டிருந்த போதும் தமிழ்ப் பேசும் ஒரே இனமாக வாழ்ந்து வந்துள்ளனர். இன்னும் அவ்வாறு வாழ்கின்றனர். போர்க்கால சூழ்நிலையிலே வடபுல முஸ்லிம்கள் விரட்டப்பட்டு அவர்கள் வாழ்ந்த மண்ணை விட்டு அகன்றமை ஒரு சோக சம்பவமாகும். முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்ட போதும் தமிழ் - முஸ்லிம் உறவிலே விரிசல் அன்று தொடக்கம் இன்று வரை ஏற்படவில்லை.

அரசியல் வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள இன உணர்வுக்கு தூண்டுவதோ ஓரினத்தை மறு இனத்தோடு மோத விடுவதோ மிகத் தவறான செயலாகும்.

அரசில் வாதிகள் இரு இனங்க ளையும் சமமாக மதித்து தமது பணியை செவ்வனே செய்து வந்தால் தமிழ் - முஸ்லிம் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும். முஸ்லிம் - தமிழ் ஒற்றுமை நிலைக்க ஒவ்வொருவரும் தம் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்பதே என்விருப்பம்.

No comments:

Post a Comment