Monday, June, 18, 2012இலங்கை::கண்ணிவெடி, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களைக் காரணங்காட்டி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தும் விடயத்தில் அரசு காலங்கடத்திவரும் இவ் வேளையில், வடமாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை அரசுக்கு முக்கிய பிரமுகர்கள் விவரித்துவரும் நிலையிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில்தான் வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்படியானால் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியாது என்ற கேள்வி எழும்புகின்றது அல்லவா?
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. அது விரைவில் நடத்தப்ப டவேண்டும் என்ற நிலையிலேயே நாம் உள்ளோம்.உள்ளூராட்சி சபைத் தேர்தலை வடக்கில் நடத்த முடியும் என்றால், மாகாணசபைத் தேர்தலையும் நடத்தலாம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment