Saturday, June 2, 2012

கொழும்பு சோதனைச் சாவடிகள் காவல்துறைக்கு!

Saturday, June, 02, 2012
இலங்கை::கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கின்ற முப்படைகளின் பல வீதி சோதனைச் சாவடிகளும் இன்று முதல் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்..

முப்படைகளின் குறித்த சோதனைசாவடிகளின் பாதுகாப்பு பொறுப்புகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள காவல்துறை வீதிச் சோதனைச் சாவடிகள் எதுவும் அகற்றப்படாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment