Saturday, June, 02, 2012இலங்கை::வடக்கில் ஒரு குடும்பத்திற்காக தலா ஒரு மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் அரசாங்கம் செலவிட்டுள்ளதாக வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பாரியளவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் பலத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு புலிகளின் பிடியிலிருந்து வடக்கு மீட்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆளுனர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment