Saturday, June, 02, 2012ஊத்துக்கோட்டை::ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், இன்று பிற்பகல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு வந்தது. நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, கிருஷ்ணா நதி நீரில் இருந்து ஆண்டுக்கு 15 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு தரவேண்டும். 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் வந்தது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தரவேண்டும். ஆனால், நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதய்யாபாளையம் அருகே உப்பளமடுகு பகுதியில் கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்தது.
இதனால் 2012 ஜனவரியில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இந்நிலையில், ரூ.50 லட்சம் செலவில் கிருஷ்ணா கால்வாயை ஆந்திர அரசு சீரமைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கண்டலேறுவில் இருந்து 152 கி.மீ. தூரம் கடந்து இன்று பிற்பகல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு தண்ணீர் வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.
No comments:
Post a Comment