Friday, June 22, 2012

புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட தமிழினிக்கு புனவாழ்வளிக்குமாறு நீதவான் உத்தரவு!

Friday, June, 22, 2012
இலங்கை::புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட தமிழினி என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி என்பவருக்கு புனவாழ்வளிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவரை அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுமார் மூன்று வருடங்களாக வெலிகடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழினி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் புலிகள் அமைப்பின் பிரபல உறுப்பினராக செயற்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment