Friday, June, 22, 2012சென்னை::விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.வினர் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் 265 இடங்களில் நடந்த மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கடந்த 7,ம் தேதி முதல் பா.ஜ.வினர் பொதுக்கூட்டம், கண்டன பேரணி நடத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் 265 இடங்களில் மறியல் நடந்தது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இல.கணேசன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 100,க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் காமராஜர் சாலை அருகே நடந்த மறியலுக்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெய் என்ற சுகதேவ், நகர தலைவர் துரைபாண்டியன், பொதுச்செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி வைரம், ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அவர்களை திருவள்ளூர் நகர போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். திருவொற்றியூரில் நகர தலைவர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் தேரடியில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு மறியல் செய்தனர். இதில் பங்கேற்ற பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ், நிர்வாகிகள் சேகர், செல்வம் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். அயனாவரம் , கொன்னூர் நெடுஞ்சாலையில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் வெங்கட் ரமணி உள்பட 198 பேரும் கொளத்தூர், ரெட்டேரி 200 அடி சாலை சந்திப்பில் நகர தலைவர் சசிதரன், மாவட்ட செயலாளர் சென்னை சிவா, இளைஞரணி செயலாளர் சேஷாத்ரி, மகளிர் அணி ருக்மாங்கதா தலைமையில் 100,க்கும் மேற்பட்டோரும் கைதாகினர்.
No comments:
Post a Comment