Wednesday, June 13, 2012

இலவசமாக சிங்கள மொழி வகுப்புக்க​ள் விரைவில் ஆரம்பம்!

Wednesday,June,13,2012
இலங்கை::கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் முயற்சியால் கல்முனை மாநகரில் உள்ள அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக சிங்கள மொழியை கற்பிக்கும்வகுப்புக்கள் தேசியமொழி மற்றும்சமூக ஒருமைப்பாட்டுஅமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல்வர் அண்மையில் தேசியமொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கல்முனையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் முடிவடைந்த பின்னர் மேற்படி சிங்கள வகுப்புக்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை உடநடியாக அமுலுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வரின் உதவியுடன் அமைச்சின் கீழ் இயங்கும் மொழிகள் நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழும், சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் கண்காணிப்பிலும் இந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்தமுதல்வர் இந்த சிங்கள வகுப்புகள் வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்படும், இப்பயிற்சி வகுப்புக்க​ளை அரசாங்கம் நிர்ணயிக்கும் காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக பூர்த்திசெய்பவர்களுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் உத்தியோகபூர்வமான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிங்கள மொழியில் நல்ல தேர்ச்சி பெற்ற முஸ்லிம், தமிழ் இளைஞர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக தன்னுடன் தொடர்பை ஏற்படுத்துவதன்மூலம் அவர்களின் பெயர்களையும், விண்ணப்பங்களையும் அமைச்சர் வாசுதேவ நணயக்காரவுக்கு முன்மொழிந்து சிங்களம்கற்பிப்பதற்கான தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment