Sunday, June 24, 2012

மதுரை - கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவது தொடர்பில் பேச்சு!

Sunday, June, 24, 2012
இலங்கை::மதுரை-கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவது தொடர்பில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிடம் மதுரை சுற்றுலா கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த மதுரை சுற்றுலா கழகத் தலைவர் பி.எஸ்.ஜி. முஸ்தபா தலைமையிலான குழுவினர் அமைச்சர் பிரியங்கார ஜயரத்னவை சந்தித்து பேசியபோது, அவரிடம் கொழும்பு- மதுரை இடையேயான விமான போக்குவரத்தை தொடங்குவது தொடர்பான மனுவை கையளித்தனர்.

பின்னர் அவர்கள் இலங்கை வணிகதுறை தலைவர் ரோகன பெரேரா மற்றும் மிகின் லங்கா அதிகாரிகளையும் சந்தித்தனர். முடிவில் மிகின் லங்கா விமானம் தனது சேவையை எதிர்வரும் குளிர்கால பட்டியலில் அதாவது செப்டெம்பர் மாதம் தங்களது சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள முன்னணி சுற்றுலா துறை அமைச்சகத்தையும் மதுரை சுற்றுலா கழக குழுவினர் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் மதுரை - கொழும்பு இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படுவதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். தென் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் இலங்கை சென்று வருவதால் வருவாய் கிடைப்பதுடன் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று விளக்கப்பட்டது.

மேலும் சுற்றுலா துறையை மதுரைக்கு வந்து விமான போக்குவரத்தை மேம்படுத்தி கலந்துரையாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதற்கான திகதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை.

மதுரையில் இருந்து இலங்கை வந்தவர்களில், மதுரை சுற்றுலா கழகத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜி.வாசுதேவன், என்.ஸ்ரீராம், செயலாளர் எஸ்.செந்தில்நாதன், உறுப்பினர் எஸ்.ராசகோபாலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

No comments:

Post a Comment