Sunday, June, 24, 2012இலங்கை::அமைதியாக வாழ்வோரை ஆபத்திற்கு தள்ளிவிட வேண்டாமென எச்சரிக்கையுத்தம் இடம்பெற்றபோது அவலக்குரல் எழுப்பிய தமிழரைத் திரும்பியும் பார்க்காத தமிழகத் தலைவர்கள் தற்போது யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நிலையில் வீணாக மூக்கை நுழைத்து தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனைவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமது அரசியல் இருப்பிற்காக இலங்கைத் தமிழரை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி இவர்கள் விட்டுவரும் அறிக்கைகளும், கவிதைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை புண்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. யுத்தம் நடந்தபோது ஆட்சி அதிகாரத்திலிருந்த கருணாநிதி அப்போது மெளனமாக இருந்துவிட்டு இப்போது எதிர்க்கட்சியானதும் எகிறிப் பாய்வதாகவும், தனது குடும்பப் பிரச்சினையை இதுவரை தீர்த்து வைக்க முடியாதவர் இலங்கை மக்களது பிரச்சினை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்றே தொல் திருமாளவன், சீமான், பழ நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும் காலம் கடந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு உதவு வதாகக் கூறுவதை ஏற்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக இருந்தால் அதுவே இலங்கைத் தமிழரின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்குச் செய்யும் பேருதவியாக இருக்கும் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment