Wednesday, 20th of June 2012இலங்கை::புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தக் கூடாது என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சில வெளிநாட்டுப் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டுப்பிரஜைகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனாஉள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில்தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு புகலிடக் கோரிக்கை விடுத்துள்ள வெளிநாட்டுப்பிரஜைகளை நாடு கடத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும் இவ்வாறு புகலிடம் கோரியவர்களை நாடுகடத்தக் கூடாது எனவும், அவ்வாறு நாடு கடத்தினால் அதற்கு எதிர்ப்பை வெளியிட நேரிடும்எனவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பானபிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment