Wednesday, June 20, 2012

மெதிரிகிரிய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் பெண்ணொருவர் பலி!

Wednesday, 20th of June 2012
இலங்கை::மெதிரிகிரிய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் கைக்குண்டொன்று வீசப்பட்டபோது அவ்வீட்டிலிருந்த 36 வயதான பெண்ணொருவர் பலியானதுடன், அவரது கணவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment