Wednesday, 20th of June 2012இலங்கை::பல ஐரோப்பிய நாடுகள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பலநாடுகள், புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைஎடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனை ஓர் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டுமெனவெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்குலக நாடுகளில் புலிகளின் பிரச்சாரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேடக வனம்செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளஆண்டறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்துஉள்ளிட்ட நாடுகள் புலிச் செயற்பாட்டாளர்களை கைது செய்து அவர்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment