Saturday, June 23, 2012

யாழ்.முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் வேளையில் குண்டுவெடிப்பு: ஊழியர் மூவர் படுகாயம்!

Saturday, June 23, 2012
இலங்கை::யாழ்.முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் வேளையில் குண்டுவெடிப்பு: ஊழியர் மூவர் படுகாயம்:-

யாழ். முகமாலையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர்கள் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குண்டொன்று வெடித்ததால், ஊழியர்கள் மூவர் படுகாயம் அடைந்தநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் பெண்ணாவார். தனபாலசிங்கம் குலசிங்கம் (32), ஜேசுதாஸா ஜெப்ரி (34), பரமசிவம் பாமினி (20) ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இன்று (23) சனிக்கிழமை காலை 7 மணியளவில் கண்ணிவெடியகற்றும் வேளையில் கண்ணிவெடி வெடித்துள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்களை கலோரஸ் வாகனத்தில் உடனடி முதலுதவி கொடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் பெண் ஒருவருக்கு இடுப்புக்கு கீழ்பகுதியில் பாரிய காயம் காணப்படுகிறது, மற்றை தனபாலசிங்கம் குலசிங்கம் எனபவருக்கு நெஞ்சுப்பகுதியும், யேசுதாசன் ஜெப்ரியூட் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment