Saturday, June 23, 2012

ஜெனிவா கூட்டத்தொடரில் 04 புலி ஆதரவு அமைப்புகள் பொய்த் தகவல்களை வழங்கியுள்ளன - திவயின!

Saturday, June 23, 2012
இலங்கை::ஜெனிவா கூட்டத்தொடரில் 04 புலி ஆதரவு அமைப்புகள் பொய்த் தகவல்களை வழங்கியுள்ளன - திவயின:-

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 20 வது கூட்டத் தொடருக்கு சென்றுள்ள புலிகளுக்கு ஆதரவான 4 அமைப்புகள், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, வடக்கில், இராணுவத்தினர் தமிழர்களை கடத்தி வருவதுடன் காணிகளை கொள்ளையிடடு வருவதாக பொய்யான தகவல்களை வழங்கியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

இவர்கள் இது சம்பந்தமாக தயாரித்துள்ள பொய்யான வீடியோ படமும், வெளிநாட்டு தூதுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து கெரி ஆனந்தசங்கரி தலைமையிலான 8 புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனிவா சென்று தூதுவர்களை சந்தித்துள்ளனர்.

5 அரசசார்பற்ற நிறுவனங்களில் உதவியுடன் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் புலிகளின் இந்த ஆதரவாளர்கள், மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டு அமைச்சர்களை சந்திக்கவும் அனுமதி கோரியுள்ளதாக திவயின மேலும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment